மதுபானக் கூடங்களை ஏலம் விடாதது ஏன்?: அமைச்சர் தங்கமணியுடன் திமுக விவாதம்

டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பார்கள்) ஏலம் விடாதது ஏன் என்பது அமைச்சர் தங்கமணியுடன் திமுக உறுப்பினர் ரகுபதி கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
மதுபானக் கூடங்களை ஏலம் விடாதது ஏன்?: அமைச்சர் தங்கமணியுடன் திமுக விவாதம்

டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பார்கள்) ஏலம் விடாதது ஏன் என்பது அமைச்சர் தங்கமணியுடன் திமுக உறுப்பினர் ரகுபதி கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ரகுபதி பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 123 மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுபானக் கூடங்கள் எல்லாம் முன்பு ஏலம் விடுவதுதான் வழக்கம். இப்போது, இயங்கும் கூடங்கள் எல்லாம் ஏலம் விட்டு அனுமதி அளிக்கப்பட்டவை இல்லை. இதனால், அரசின் கஜானாவுக்கு வர வேண்டிய வருவாய் ரூ.900 கோடி எங்கே போகிறது என்றே தெரியவில்லை என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுப் பேசியது: திமுக உறுப்பினர் தவறான தகவல் தெரிவிக்கிறார். மதுபானக் கூடங்கள் எல்லாம் ஏலம் விட்டுத்தான் அனுமதி கொடுக்கப்படுகிறது. சிறிய கிராமங்களில் ஏலம் எடுப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. குறிப்பிட்ட தொகையை வைத்து ஏலம் விடும்போது, அந்தத் தொகை இல்லை என ஏலம் எடுக்க வர மறுக்கின்றனர். எனினும், மீண்டும் மீண்டும் ஏலம் விட்டுதான் அனுமதிக்கிறோம்.
ரகுபதி: புதுக்கோட்டையில் உள்ள மதுபானக் கூடங்கள் எதுவும் ஏலம் விடப்பட்டவை இல்லை. காவல் துறையினர் மூலம் கலால் துறையினர் மூலம் விசாரித்துக் கொள்ளலாம். 
தங்கமணி: அரசுக்கு ரூ.900 கோடி நஷ்டம் என்கிறார். தமிழத்தில் உள்ள மொத்த மதுபானக் கூடங்கள் மூலமே ரூ.436 கோடிதான் வருமானம் வருகிறது என்கிற போது, எப்படி ரூ.900 கோடி நஷ்டமாகும்?
ரகுபதி: ஏலம் எடுக்க யாரும் வரவில்லை என அமைச்சர் கூறுகிறார். ஏலம் விடுங்கள். எங்கள் கட்சியினரே எடுப்பர்.
தங்கமணி: பூரண மதுவிலக்கு வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. இப்போது திமுக உறுப்பினர் மதுபானக் கூடங்களை ஏலம் எடுக்க வேண்டும் என்கிறார். இதன் மூலம் மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை என்றுதானே அர்த்தம்.
ரகுபதி: ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று அமைச்சர் கூறுகிறார். அதனால், தொழில் என்ற அடிப்படையில் ஏலம் எடுக்க முன் வருகிறோம் என்று கூறுகிறோம். ஆனால், பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. அதில், மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com