காவிரி மேலாண்மை வாரியமும் பாஜகவுடன் நட்பும்: சட்டப்பேரவையில் நடந்த காரசார வாதம்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக எம்எல்ஏ பிச்சாண்டி எழுப்பிய குற்றச்சாட்டால், சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியமும் பாஜகவுடன் நட்பும்: சட்டப்பேரவையில் நடந்த காரசார வாதம்


சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக எம்எல்ஏ பிச்சாண்டி எழுப்பிய குற்றச்சாட்டால், சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் ஏற்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்காமல் மத்தியில் ஆளும் பாஜகவுடன் அதிமுக நட்பு பாராட்டி வருவதாக திமுக எம்எல்ஏ பிச்சாண்டி குற்றம்சாட்டினார்.

தமிழக அரசின் நடவடிக்கையைப் பார்த்தால் பசியை விட நட்பு தான் முக்கியம் என்ற புலியின் கதை போல் உள்ளது என்றும் எம்எல்ஏ பிச்சாண்டி கூறினார்.

எம்எல்ஏ பிச்சாண்டியின் பேச்சுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, பாஜகவுடன் கூட்டணியும்  இல்லை, ஆதரவும் இல்லாத நிலையில் அதிமுக காவிரி மேலாண்மை வாரியத்துக்காக கடுமையாக போராடி வருவதாக பேரவையில் முதல்வர் கூறினார்.

மேலும், முந்தைய காலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த திமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்தது? மத்திய அரசுடன் நட்பாக இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையே? என்று முதல்வர் சுட்டிக்காட்டினார்.

அப்போது எழுந்த மு.க. ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் உங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். ஆனால், தமிழக அரசுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் குரல் கொடுக்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com