நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தினார்.
நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தினார்.
தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'கிரீன் (பசுமை) கலாம்' திட்டம் மூலமாக கடந்த 8 ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் ஒரு கோடி மரக் கன்றுகள் நட வேண்டும் என்பது எனது இலக்கு. அதன்படி இதுவரை 29.30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மட்டுமின்றி தனியார் கல்வி நிறுவன வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெரிய கல்வி நிறுவனங்களின் உதவி எனக்கு கிடைத்தால் ஒரு கோடி மரக்கன்றுகள் எனும் இலக்கை விரைவில் அடைய முடியும். போராட்டம் காரணமாகத் திரைப்படத் தயாரிப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளியாகாததால், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைத் துறை நலிவடைந்திருப்பதால் திரைப்படங்களுக்கான வரி குறைக்கப்பட வேண்டும். அதேபோல், நடிகர்களும் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். திரையரங்குகள் மூடப்பட்டிருப்பது பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத் துறையில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விவேக்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com