கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல பெட்டகம் விரைவில் தொடக்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்றாவது மாதத்தில் தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல பெட்டகம் விரைவில் தொடக்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்றாவது மாதத்தில் தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினர்
மு.பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்) எழுப்பிய கேள்வி மற்றும் துணைக் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்:
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், அளிக்கப்பட்டு வந்த நிதி ரூ.18,000-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, நிதியுதவி ரூ.12,000-ஆக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுடன் கூடுதலாக ரூ.6,000 கொடுக்கப்படும். அதில், கர்ப்பமான மூன்றாவது மாதத்தில் ரூ.2,000 ரொக்கமாக வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஏற்படக் கூடிய ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து நலப் பெட்டகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், சத்துமாவு 2 பாக்கெட் (தலா 500 கிராம்), இரும்புச்சத்து திரவம் 3 பாட்டில்கள் (200 மில்லிலிட்டர்), பேரீச்சம்பழம் 2 பாக்கெட்டுகள் (500 கிராம்), புரதச் சத்து நிறைந்த பிஸ்கெட், ஆவின் நெய், குடல்புழு நீக்க மாத்திரை மற்றும் பருத்தித் துண்டு ஆகியன அந்தப் பெட்டகத்தில் அடங்கும். இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி விரைவில் துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com