காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஸ்டாலின் வலியுறுத்தல்

மார்ச் 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை: மார்ச் 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். மார்ச் 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மார்ச் 29ம் தேதி வரை பொறுத்து இருப்போம் என துணை முதல்வர் கூறுகிறார். ஆனால், 6 வாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை செயலர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக ஆந்திராவை போல நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளது. அதிமுக அழுத்தத்தால் தான் கடந்த 13 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான சொற்றொடரை வலியுறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமைந்திருந்தது.

காவிரி பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து அனைவரும் மீண்டும் கூடி ஆலோசிப்போம். மத்திய நீர்வளத்துறை செயலாளர், காவிரி வாரியம் குறித்து நாளிதழில் கூறிய கருத்துக்கள் கிடைக்கவில்லை. 

மத்திய அரசுக்கு எந்த விதமான அழுத்தம் கொடுப்பது என்று நாம் அனைவரும் மீண்டும் கூடி ஆலோசிப்போம் என்று பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com