கேரள ஆதிவாசி இளைஞரை அடுத்து மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை!

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் பசிக்கு உணவு கேட்டு வந்த மூதாட்டியைக் கயிற்றில் கட்டி கடலுக்குள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் மணக்குடி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சாப்பாடு கேட்டு வீடு வீடாகப் பிச்சை எடுத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் தனக்கு சாப்பாடு வேண்டும் என்று மலையாளத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. 

மூதாட்டி சொன்னது குழந்தைக்குப் புரியாததால் அந்தக் குழந்தை தாயிடம் கூறியுள்ளது. அந்த பெண்மணி குழந்தையைக் கடத்தவந்தவர் எனக் கூச்சலிட்டுள்ளார். அங்குத் திரண்ட மக்கள் மூதாட்டியைக் கயிற்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். மூதாட்டியை குண்டுகட்டாக துக்கிச்சென்று கடலுக்குள் வீசி கொடுமைப்படுத்தினர். 

பின்னர், அந்த ஊரில் உள்ள சில நல்ல உள்ளங்கள் கேரள மூதாட்டியை மீட்டு பத்திரமாக வெளியே அனுப்பிவைத்துள்ளனர். 

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, காண்போர் நெஞ்சைப் பதை பதைக்க வைத்துள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com