ரவுடிகள் கேக் வெட்டிய சம்பவம்: துரைமுருகனின் நகைச்சுவையும், முதல்வரின் பதிலடியும்

சென்னையில் ரவுடிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நகைச்சுவையாகப் பேசியதற்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.
ரவுடிகள் கேக் வெட்டிய சம்பவம்: துரைமுருகனின் நகைச்சுவையும், முதல்வரின் பதிலடியும்


சென்னை: சென்னையில் ரவுடிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நகைச்சுவையாகப் பேசியதற்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

ரவுடிகள் கேக் வெட்டிய விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கும், திமுக எம்எல்ஏ துரைமுருகனுக்கும் இடையே இன்று காரசார விவாதம் நடைபெற்றது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய துரைமுருகன், ரவுடிகள் கேக் வெட்டிக் கொண்டாடும் வகையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று விமரிசனம் செய்தார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர், ஒட்டுமொத்தமாக ரவுடிகளை கைது செய்தது அதிமுக அரசு. ஆனால் இதுபோன்ற செயல் திமுக ஆட்சியில் நடக்கவில்லை. ரவுடிகளைக் கைது செய்த பிறகு தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்றார்.

திமுக ஆட்சியில் ரவுடிகள் கைது செய்யப்படவில்லை என்றாலும் கேக் வெட்டிக் கொண்டாடியது அதிமுக ஆட்சியில்தான். பொதுப்பணித்துறையில் இருந்த போது பேசாத ஈபிஎஸ் இப்போது நன்றாகப் பேசுகிறார். ஆட்சி மாறினாலும், நிதித்துறை செயலாளர் சண்முகம் இன்னும் மாறவில்லை என்று கூறியபோது பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், தற்போதைய அரசிடம் வளம் இல்லாத நிலையே உள்ளது. 2011ல் இருந்த திட்டங்கள்தான் மீண்டும் ஆட்சியமைக்க முடிந்தது. 2015ல் தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

எம்எல்ஏவாக இருந்த போது பேசாதவர்கள் முதல்வரான பிறகு பேசுவது வளர்ச்சி - மகிழ்ச்சி. தர்ம யுத்தம் தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மாநில வளர்ச்சி விகித வீழ்ச்சியை புள்ளி விவரத்துடன் ஏன் தெரிவிக்கவில்லை? பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது மக்கள் தொகை வளர்ச்சியைத் தவிர வேறு எந்த வளர்ச்சியும் இல்லை. வேளாண்மையில் வளர்ச்சி இல்லாத நிலையே உள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வேளாண் துறையில் வளர்ச்சியடைந்ததால்தான் முதலிடம் பிடித்து தமிழகம் விருது பெற்றது. பொருளாதார மந்தநிலைக்கு சர்வதேச பொருளாதார பின்னடைவே காரணம் என்று விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com