மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச் சாலை திட்டம் எப்போது நிறைவேறும்? துரைமுருகன் கேள்வி

மதுரை - தூத்துக்குடி இடையேயான தொழில் பெரு வழிச் சாலை திட்டம் எப்போது நிறைவேறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச் சாலை திட்டம் எப்போது நிறைவேறும்? துரைமுருகன் கேள்வி

மதுரை - தூத்துக்குடி இடையேயான தொழில் பெரு வழிச் சாலை திட்டம் எப்போது நிறைவேறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
 சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் துரைமுருகன் பேசியது: தொழில் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கியம். மதுரை - தூத்துக்குடிக்கு இடையே தொழில் பெரு வழிச் சாலை அமைக்கப்படும் என அறிவித்தீர்கள். இது தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு முறை அறிவிக்கப்பட்டும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இப்படியிருந்தால் தொழில் வளர்ச்சி எப்படி மேம்படும்? என்றார்.
 அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தில் அதிக அளவு சாலைகளை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் இரண்டு முறை சென்னைக்கு வந்து ஆய்வு செய்து சுமார் ரூ.ஒரு லட்சம் கோடி அளவுக்கு சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டால்தான் தொழிற்சாலைகள் அதிகமாக வரும் என்ற அடிப்படையில்தான் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 இதன்படிதான் சேலத்திலிருந்து சென்னை வரை ரூ.10,000 கோடியில் பசுமை வழிச் சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
 அமைச்சர் தங்கமணி: சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளால்தான் மதுரை - தூத்துக்குடி இடையேயான தொழில் பெரு வழி சாலை திட்டம் காலதாமதம் ஆகிறது. நிலத்தைக் கையகப்படுத்தப் போனால், உடனே நீதிமன்றத்துக்குச் சென்று விடுகின்றனர். வழக்கு முடிந்த பிறகுதான் நிலத்தைக் கையகப்படுத்த முடியும்.
 துரைமுருகன்: இதே காரணத்தை எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சொல்ல முடியும்?.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com