மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக ஆர். நடராஜ், பி.கே.சேகர்பாபு, மருதமுத்து ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் தனபால் வியாழக்கிழமை அறிவித்தார்
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக ஆர். நடராஜ், பி.கே.சேகர்பாபு, மருதமுத்து ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் தனபால் வியாழக்கிழமை அறிவித்தார்.
 மாற்றுத்திறனாளிகள் வாரிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்திருந்தார். இந்தப் பதவிக்கு மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. நடராஜ், கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்து, துறைமுகம் திமுக எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு ஆகியோர் மட்டும் விண்ணப்பித்திருந்தனர்.
 இதையடுத்து, இந்த மூவரும் போட்டியின்றி மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் தனபால் அறிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com