குரங்கணி தீ விபத்து: முதல்கட்டமாக 73 பேரிடம் விசாரணை

குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதல்கட்டமாக 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
குரங்கணி தீ விபத்து: முதல்கட்டமாக 73 பேரிடம் விசாரணை

குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதல்கட்டமாக 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
 தேனி மாவட்டம், போடி குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிக்க பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது.
 இதையடுத்து தேனி மாவட்டத்துக்கு வந்த அதுல்ய மிஸ்ரா, வியாழக்கிழமை தீ விபத்து நடந்த மலைப்பகுதியில் நடந்தே சென்று ஆய்வு செய்தார். 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குரங்கணியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான வாட்ச் டவர், மலையேற்ற பயிற்சி செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்குமிடம், வனத் துறை சோதனை சாவடி, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை அவர் பார்வையிட்டார்.
 தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: பின்னர் குரங்கணி மலை கிராம மக்களிடமும் விசாரணை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
 குரங்கணி தீ விபத்து தொடர்பாக காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர்கள், நக்ஸல் தடுப்புப் படையினர், வன ஆர்வலர்கள், மீட்புப் பணிக்கு உதவிய கொழுக்குமலை, கொட்டகுடி கிராம மக்கள் உள்ளிட்ட 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரங்கணியில் ஆய்வு செய்தபோது இரண்டு மலையேற்ற பாதைகள் இருந்தாலும், குரங்கணி-டாப்ஸ்டேசன் பாதை மட்டுமே அனுமதிக்கப்பட்ட பாதை ஆகும். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற பாதை அனுமதிக்கப்படாத பாதை ஆகும். விசாரணையில் முடிவில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றார் அவர்.
 வாக்குமூலம் விடியோவில் பதிவு: காவல்துறை சார்பில் போடி டி.எஸ்.பி. பிரபாகரன், சார்பு ஆய்வாளர் ராஜலிங்கம் உள்ளிட்ட 14 பேர், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உள்பட 12 பேர் உள்ளிட்ட 73 பேர் விசாரணையின்போது அளித்த வாக்குமூலம் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com