கோவையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழிசை உள்பட 850 பேர் கைது

கோவையில் பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை உள்பட 850 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழிசை உள்பட 850 பேர் கைது

கோவையில் பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை உள்பட 850 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 கோவை மாவட்ட பாஜக தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டின் மீது அண்மையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து, பாஜக அலுவலகம், பாஜக நிர்வாகிகள் வீட்டின்மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருவதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில், கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடந்த சில நாள்களுக்கு முன் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டத் தலைவரை தாக்கும் வகையில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில், அவரது கார் சேதமடைந்தது.
 மேலும், மற்றொரு நிர்வாகியின் வீட்டைத் தாக்கச் சென்ற கும்பல், தவறுதலாக அருகிலுள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எரித்தது. கோவையில் பாஜக பிரமுகர்களைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் , இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
 கோவையில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. அதே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதே போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். கோவை மாவட்டம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்றார்.
 காவல் துறையினரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தமிழிசை சௌந்தரராஜன், தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 850 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com