நுகர்வு கலாசாரத்தில் மாற்றம் தேவை: உணவுப் பாதுகாப்பு ஆணையர் வலியுறுத்தல்

சமூகத்தில் நுகர்வு கலாசாரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுவது அவசியம் என தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி வலியுறுத்தினார்.
நுகர்வு கலாசாரத்தில் மாற்றம் தேவை: உணவுப் பாதுகாப்பு ஆணையர் வலியுறுத்தல்

சமூகத்தில் நுகர்வு கலாசாரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுவது அவசியம் என தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி வலியுறுத்தினார்.
 மேலும் அவசியம் இல்லாத பொருள்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
 உலக நுகர்வோர் தினவிழா ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த விழாவுக்கு தமிழக அரசின் திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு, புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு ("ஃபெட்காட்'), தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் (டிபிசிசி), இந்துக் கல்லூரி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
 இதில் எஸ்.மதுமதி பேசியது:- இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் பொருள்களை வாங்கும்போது நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். குறிப்பாக காலாவதியான, கலப்படமான பொருள்களை விற்பது, அச்சிடப்பட்ட விலைக்கு மேல் பொருள்களை அதிகம் விலை வைத்து விற்பது, அதற்கான ரசீதுகளைத் தராமல் இருப்பது மூலமாகவுமே இன்றைய நுகர்வோர்கள் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். பொதுமக்கள் ஒவ்வொரு பொருள்களையும் வாங்க நினைக்கும்போது போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறக் கூடாது. விழிப்புடன் இருந்தாலே ஏமாற்றப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
 தேவையற்ற பொருள்களை... நுகர்வோருக்கு கல்வி, சுற்றுச்சூழல், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றுக்கான உரிமைகள் உள்ளன.
 இவற்றின் மூலம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பொருள்கள், உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். தேவையான பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்; தரமற்ற பொருள்கள், சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்டஈடு பெறலாம்.
 பொதுமக்கள் பெரும்பாலும் தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்த்தல் வேண்டும்; பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் விலை, தேதி, தரம், முத்திரை போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும், தமிழக அரசும் நுகர்வோரைத் தாங்கும் தூண்
 களாக விளங்குகின்றன என்றார் அவர். முன்னதாக சிறந்த நுகர்வோர் ஆர்வலர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.மதுமதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
 விழிப்புணர்வு கண்காட்சி: நுகர்வோர் பாதுகாப்பு விழாவையொட்டி தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை உள்பட பல்வேறு துறை
 களின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை கண்டறிவது குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 விழாவில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எம்.நாராயணன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன், இந்துக் கல்லூரி முதல்வர் வி.லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com