பார் இருக்கும் வரை தமிழிசை மூவரின் பெருமைகள் இருக்கும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம்

பார் இருக்கும் வரை தமிழிசை மூவரின் பெருமைகள் பரவியிருக்கும் என, தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம் சூட்டினார்.
பார் இருக்கும் வரை தமிழிசை மூவரின் பெருமைகள் இருக்கும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம்

பார் இருக்கும் வரை தமிழிசை மூவரின் பெருமைகள் பரவியிருக்கும் என, தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம் சூட்டினார்.
 நாகை மாவட்டம், சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில், சீர்காழியில் ஆண்டுதோறும் தமிழிசை மூவர் விழா அரசு சார்பில் மூன்று நாள்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விழா, சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் மார்ச் 22 -ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது: தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோர் காலத்தால் முற்பட்டவர்கள். தமிழிசை மூவர்களும் தமிழ் கீர்த்தனைகள் பாடி தமிழிசையை உலகம் முழுவதும் பரவச்செய்துள்ளது பெருமைக்குரியதாகும். உலகம் உள்ளவரை தமிழ் மொழி வாழவைத்து வாழும். தமிழிசை மூவரின் பெருமைகள் பார் இருக்கும் வரை பரவியிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார் அவர்.
 இதைத்தொடர்ந்து, 30 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச் சுடர் மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய கலை மன்ற விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், எம்பி ஆர்.கே. பாரதிமோகன், எம்எல்ஏ பி.வி. பாரதி, கலைப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பின்னர், அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு எந்த ஒரு நிலை எடுத்தாலும் அது அதிகாரம் படைத்த குழுவாக இருக்க வேண்டும். காகிதத்தில் சர்க்கரை என எழுதி வாயில் போட்டால் இனிக்காது. சர்க்கரையை சுவைத்தால்தான் அது இனிக்கும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com