விமானத்தில் பெங்களூருக்கு பறந்து மகிழ்ந்த ஆதரவற்ற மாணவர்கள்

ஆதரவற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் வகையில், 77 ஆதரவற்ற மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 
விமானத்தில் பெங்களூருக்கு பறந்து மகிழ்ந்த ஆதரவற்ற மாணவர்கள்

ஆதரவற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் வகையில், 77 ஆதரவற்ற மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
 சென்னையில் இயங்கும் ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ராஸ் மெட்ரோ டிரஸ்ட் அமைப்பின் அன்னதான திட்டமான சென்னை ஃபுட் பேங்க் வெள்ளி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, 7 முதல் 13 வயது வரையிலான 77 ஆதரவற்ற மாணவர்களை விமானத்தில் பெங்களூருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 77 ஆதரவற்ற மாணவர்களும், அவர்களின் 7 ஆசிரியர்களும் பெங்களூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
 இவர்கள் அனைவரும் சேவாலயா, மரியாலயா, ஷைன் அறக்கட்டளை, எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா, எஸ்.இ.இ.டி. ஆதிபராசக்தி குழந்தைகள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பாய்ஸ் டவுன் சொசைட்டி ஆகிய ஏழு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இம்மாணவர்கள் பெங்களூருவில் ஒரு நாள் முழுவதும் ஃபன் ஐலேண்ட் மற்றும் ஸ்நோ வேர்ல்ட் கேளிக்கை பூங்காக்களில் விளையாடவும், அவர்களுக்கு மதிய மற்றும் இரவு விருந்தும் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 இதுகுறித்து ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ராஸ் மெட்ரோ டிரஸ்ட் அமைப்பின் சென்னை ஃபுட் பேங்க் திட்டத் தலைவர் ராஜேஷ் கோத்தாரி, சென்னை ஃபுட் பேங்க் உதான் திட்டத் தலைவர் அக்சய் சேத் ஆகியோர் கூறியது:
 வாய்ப்பு வசதிகளற்ற இந்த ஏழை மாணவர்கள் மிகக் கடினமான, சவால் மிக்க சூழல்களில் வாழ்ந்தாலும் அவர்கள் எந்த செயலையும் திறம்பட செய்து வாழ்வில் சாதனைப் படைக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் வானத்தைப் பார்க்கும் போது உயரத்தில் பறக்கும் விமானத்தைப் பற்றிய கனவுகளிலேயே இதுவரை இருந்துள்ளனர்.
 ஆனால், தற்போது உண்மையான விமானப் பயண அனுபவத்தை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களது கனவை நனவாக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, கலைகள் போன்ற பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனைகளை புரிந்துள்ள இவர்களைப் பாராட்டும் வகையில் இந்த விமான அனுபவத்தை சிறப்புப் பரிசாக அவர்களுக்கு நாங்கள் அளித்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com