மே மாதம் முழுவதும் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்

கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவும் செயல்படும்
மே மாதம் முழுவதும் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்

கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவும் செயல்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு யானை, சிங்கம், புலி, சிறுத்தை, பலவகையான மான்கள், பாம்புகள், முதலைகள், பறவைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிலும் மான்கள், பாம்புகள், முதலைகள், பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.
செவ்வாய்க்கிழமைகளிலும்... இந்த இரு பூங்காக்களும் பராமரிப்புப் பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி, பள்ளி மாணவர்கள், பெற்றோர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மே மாத செவ்வாய்க்கிழமைகளான 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரு பூங்காக்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com