பி.இ. ஆன்-லைன் விண்ணப்பம்: 45,000 பேர் பதிவு

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெள்ளிக்கிழமை வரை 45 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெள்ளிக்கிழமை வரை 45 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது. முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்-லைன் முறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பி.இ. இடங்களைத் தேர்வு செய்யலாம்.
வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காகவும், அனைத்து விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரி பார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மாணவர்கள் கட்டணம் இன்றி சேவையைப் பெற முடியும்.
மே 30 வரை விண்ணப்பிக்கலாம்...: இதற்கான விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரை 9 நாள்கள் நிறைவுற்ற நிலையில் 45,608 மாணவ, மாணவிகள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர். இவர்களில் 5,916 பேர் மட்டுமே பல்கலைக்கழக உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர். ஆன்-லைனில் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com