மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: கோடையிலும் அருவிகளில் கொட்டும் நீர்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி, உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலையில் உள்ள
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: கோடையிலும் அருவிகளில் கொட்டும் நீர்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி, உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி ஆகிய அருவிகளில் நீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் இங்கு உள்ளது. மேலும், இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடிய ஒன்று. இங்கு படகுத் துறை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள வண்ணமீன் பூங்கா, குழந்தைகளுக்கான அழகிய நீச்சல் குளம் ஆகியவை அமைந்துள்ளன. இத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றுள்ள இந்த சுற்றுலாத் தலத்துக்கு கோடை விடுமுறைக் காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் திருமூர்த்திமலைப் பகுதி கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. 

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி நீர்வரத்து துளியும் இன்றி வறண்டு காணப்பட்டதால் இங்கு வந்த ஒரு சில சுற்றுலாப் பயணிகளும் மலைக்கு மேலே செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பஞ்சலிங்கம் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பஞ்சலிங்கம் அருவிக்கு சனிக்கிழமை அதிக அளவில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவியில்...: இதுபோல் குமரி மாவட்டத்தில் தொடர் கோடை மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு, களியல் பகுதியில் வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது. இதில் திற்பரப்பில் 62.2 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இந்நிலையில் திருவட்டாறு, குலசேகரம், அருமனை, பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. 

அதிக தண்ணீர்: மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்திருந்தனர். 

நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com