பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர்: ரஜினிகாந்த் பேட்டி 

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர்: ரஜினிகாந்த் பேட்டி 

சென்னை: மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71) செவ்வாய் மதியம் சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகுமாரன் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது  அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செவ்வாய் மதியம் காலமானார்.

பாலகுமாரனின் மறைவு அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பாலகுமாரனின் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது மைலாப்பூர் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   

எழுத்தாளர் பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் மிகப் பெரிய எழுத்தாளர். எனது பாட்ஷா படத்திற்கு அவர் வசனம் எழுதினர். அதன் பின்னர் வேறு ஒரு படத்திற்கு வசனம் எழுத அழைத்த பொழுது, தற்பொழுது இலக்கியமும் ஆன்மிகமும் எனது உலகம் என்று தெரிவித்தார்.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com