+2 தேர்வு முடிவுகள்: மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி; 238 அரசுப் பள்ளிகளில் 100% பாஸ்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.
+2 தேர்வு முடிவுகள்: மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி; 238 அரசுப் பள்ளிகளில் 100% பாஸ்


சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு 01.03.2018 முதல் 06.04.2018 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620.
இவர்களில், 
பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் - 8,60,434
    மாணவியரின் எண்ணிக்கை 4,60,255.
    மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.

பொதுப் பாடப்பிரிவில் (General Stream) தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613.
தொழிற்பாடப்பிரிவில் (Vocational Stream) தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள் - 91.1 %
       மாணவியர் 94.1% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
       மாணவர்கள் 87.7% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களைவிட மாணவியரே 6.4%அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம், மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்வெழுதியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்கள் (தமிழகத்தில் அமைந்துள்ள பள்ளிகள்)
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 6,754.
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,907.
இதில் 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். இந்த 2,574 பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com