குஷ்புவை திமுகவினர் முட்டை, செருப்பு வீசித் தாக்கவில்லை: டிகேஎஸ் இளங்கோவன் 

குஷ்புவை திமுகவினர் முட்டை, செருப்பு வீசித் தாக்கவில்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
குஷ்புவை திமுகவினர் முட்டை, செருப்பு வீசித் தாக்கவில்லை: டிகேஎஸ் இளங்கோவன் 

குஷ்புவை திமுகவினர் முட்டை, செருப்பு வீசித் தாக்கவில்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் புதியவர் நியமனம் செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், திமுகவில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து குஷ்பு வெளியேற்றப்பட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியில் அவரது நடிப்பு எடுபடாது என்றும் தெரிவித்தார். 

ஆனால் திருநாவுக்கரசரின் இந்த கருத்தை திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க.விலிருந்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அண்ணன் க.திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார். திமுகவினர் யாருமே குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை - தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com