பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கலந்தாய்வுக்கும் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம்

பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கலந்தாய்வுக்கும் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ எழிலரசன் மற்றும் வழக்குரைஞர் பொன்பாண்டி ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்த மனு விவரம்: ''தமிழகத்தில் பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தல், சான்றிதழ்கள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு, தமிழக கிராமப்புற மாணவர்கள், தமிழ்வழியில் கற்றவர்களுக்குச் சிரமத்தை உண்டாக்கும். எனவே, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கவும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. அப்படியிருக்க கடன் அட்டை, வரவு அட்டைகளைப் பயன்படுத்தி எப்படி விண்ணப்பிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை நேரடியாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்த அனுமதிப்பது மற்றும் தமிழில் விண்ணப்பிப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு குறித்து, வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்குரைஞர், மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை டி.டி.யாக ஏற்க மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

நாளை முதல் மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்ப கட்டணத்தை டி.டி மூலமாகவும் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை ஆன்லைன் முறை உறுதி செய்யும் என்றும் வழக்குரைஞர் தெரிவித்தார். 

இதையடுத்து, ஆன்லைன் மூலம் மட்டும் பொறியியல் கலந்தாய்வு என்ற முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் உள்ளதையும், டி.டி மூலமாக விண்ணப்ப கட்டணம் ஏற்கப்படும் என்பதையும் நாளிதழ்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான விவரங்களை ஜூன் 8-ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், விண்ணப்பக் கட்டணத்தை மாணவ, மாணவிகள் டி.டியாக செலுத்தலாம் என்றும் பின்னர் டி.டி.யாக கட்டணத்தை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com