பி.இ. கலந்தாய்வு விண்ணப்பக் கட்டணம்: இன்று முதல் வரைவோலையாகச் செலுத்தலாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக ('டி.டி.') செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து முடித்துள்ளது.
பி.இ. கலந்தாய்வு விண்ணப்பக் கட்டணம்: இன்று முதல் வரைவோலையாகச் செலுத்தலாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக ('டி.டி.') செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து முடித்துள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில் விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக மாணவர்கள் செலுத்தலாம் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் ஆன்-லைன் மூலம் நடத்த உள்ளது. இதற்கு ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்-லைனிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், பி.இ. படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இணையதள வசதி மற்றும் வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களின் வசதிக்காக, கட்டணத்தை வரைவோலையாகப் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்த பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தியது.
ஏற்பாடுகள் தயார்: அப்போது, கட்டணத்தை வரைவோலையாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் மென்பொருளை மாற்றியமைக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும். மே 18-ஆம் தேதிக்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடும் என பல்கலைக்கழகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கட்டணத்தை வரைவோலையாகப் பெறுவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து முடித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறியதாவது: விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகப் பெறுவதற்கான மென்பொருள் மாற்றம் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு விட்டன. எனவே, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 18) காலை 9.30 மணி முதல் விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகச் சமர்ப்பிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com