ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கு தீ வைப்பு: 5 மாடிகள் கொண்ட 5 கட்டடங்கள் எரிந்து சேதம்!

ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கு தீ வைப்பு: 5 மாடிகள் கொண்ட 5 கட்டடங்கள் எரிந்து சேதம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கு காவல்துறையினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகளில் சேதம் ஏற்பட்டது. அதேபோல போராட்டக்காரர்கள் மீது போலீஸாரும் தடியடி நடத்தினர். தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போலீஸாரை துரத்தியதால் போலீஸார் ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை வீசியது.

இந்நிலையில், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகி உள்ளதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 5 மாடிகள் கொண்ட 5 கட்டடங்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com