ஸ்டெர்லைட் போராட்டத்தில் 3 பேர்  பலி: 10 பேர் காயம்; 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 3 பேர்  பலி: 10 பேர் காயம்; 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்தவர்கள், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன்  என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது. 

ரயில்வே காலணி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளனர். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை வெளியேற்ற காவல்துறையினர், தடியடி நடத்தினர். இதில் ஏராளமான கிராம மக்கள் காயமடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், காவல்துறையின் தடியடியில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து, அங்கே இருந்த காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கி, கவிழ்த்துப் போட்டனர்.

இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com