குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது ஏன்?

காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் அடியாகவே குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது ஏன்?

காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் அடியாகவே குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் வயதினர், முதியோர் என்று சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பள்ளித் தேர்வு முடிவுக்காக காத்திருந்த பெனிஸ்டா என்ற சிறுமியும் உயிரிழந்துள்ளார். இந்தச் சோகத்தை தமிழகம் மறக்காது.
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது யார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு வரை போகலாம் என்று அனுமதி அளித்தது யார், இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள அவரே அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்காகச் செல்ல உள்ளேன். காவிரி விவகாரம் பேச்சுவார்த்தையில் தீர்க்கக் கூடியது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொடக்க விழாவில் நானும் கூறியதாகும். அதனால் பேச்சுவார்த்தையை நோக்கிய முதல் அடியாகவே விழாவில் பங்கேற்க உள்ளேன்.
காவிரி விவகாரம் குறித்து இன்னும் 15 ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தை அணுகக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்துடன் தான் பேசக் கூடாது. நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம். அதில் தவறில்லை. 
குடிமைப் பணிகள் தேர்வில் ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. 1978}ஆம் ஆண்டுகளிலேயே இந்த முறையை மாற்ற முயற்சி நடைபெற்றது. தற்போது ஏன் மீண்டும் அது கொண்டு வரப்படுகிறது என்று தெரியவில்லை. இதுஅழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com