துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? டிபிஜி ராஜேந்திரன் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதால், உரிய எச்சரிக்கை செய்த பிறகே
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? டிபிஜி ராஜேந்திரன் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதால், உரிய எச்சரிக்கை செய்த பிறகே வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் தே.க. ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிப்பதை தடுக்கும் பொருட்டு தகுந்த எச்சரிக்கைக்குப் பின் கண்ணீர்ப் புகை குண்டுகளை உபயோகித்தும், தடியடி பிரயோகம் செய்தும், வன்முறைக் கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். 
இதனால் காவல்துறை வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்தது. இச்சம்பவத்தில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் தாக்குதலில் பல காவலர்களும் , பொதுமக்களும் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்துடன் அரசு மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் பல தீ வைக்கப்பட்டும், கல்வீச்சு நடத்தியும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 
இதனிடையே முதல்வர் பழனிசாமி இச்சம்பவம் குறித்த விவரங்களையும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளையும் நேரில் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாவண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் தற்போது போதுமான காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது தூத்துக்குடியில் அமைதி நிலவி வருகிறது. தூத்துக்குடி நகரில் பொது அமைதியை பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com