தூத்துக்குடி சம்பவம்: விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி சம்பவம்: விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, முற்றுகையிட்டவர்களை கலைந்து செல்லும்படி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தடை உத்தரவையும் மீறி, காவலர்களின் அறிவுரையையும் புறக்கணித்து காவலர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரின் வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் கல்வீசி தாக்கியும் சேதப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டும், பொது மக்கள் உயிருக்கும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் பொருட்டும், முற்றுகையாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.
10 பேர் பலி: இந்தச் சம்பவத்தில் துரதிருஷ்டவசமாக 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்.
ஒரு நபர் விசாரணை ஆணையம்: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com