தண்ணீர் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு தாகம் தணிக்கும் செய்தி

இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக வானிலை குறித்து பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தண்ணீர் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு தாகம் தணிக்கும் செய்தி


சென்னை: இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக வானிலை குறித்து பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இன்று அவர் தனது பேஸ்புக்கில் பருவ மழை குறித்து கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்க உள்ளது. அதன் துவக்கமாக வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் மழை வெளுத்து வாங்கும்.

29ம் தேதியே பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்கு முன்பே தெற்கு கேரளா அல்லது கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். 

தென்மேற்கு பருவ மழையால் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதிகளுக்கு மட்டுமே மழை கிடைக்கும்.

சென்னைக்கு...
சென்னைக்கும் தென்மேற்கு பருவ மழைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன் அப்படி என்றால், அதுதான் வானிலை. ஒரு வேளை சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். ஜூன் மாதம் சென்னைக்கான மழை மாதம் இல்லை. இதே தான் தமிழகத்துக்கும் பொருந்தும்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகே இருக்கும் அணைகள் இந்த மழையால் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. அதனால், அப்பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com