தூத்துக்குடி சம்பவம்: ஆளுநரிடம் முதல்வர் விளக்கம்

தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி சம்பவம்: ஆளுநரிடம் முதல்வர் விளக்கம்

தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை விளக்கம் அளித்தார்.
கலாசார விழாவில் பங்கேற்க உதகை சென்றிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூத்துக்குடி சம்பவத்தை அடுத்து திடீரென புதன்கிழமை சென்னை திரும்பினார்.
அவரை ஆளுநர் மாளிகையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரவு 9.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், டிஜிபி தே.க.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சட்டம்-ஒழுங்கு விவகாரம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரோ அல்லது டிஜிபியோ அரசின் சார்பில் ஆளுநர் மாளிகைக்கு அறிக்கைகள் அளிப்பார்கள். இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள். ஆனால், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வரே நேரில் விளக்கம் அளித்துள்ளார். எதனால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது, அதற்கான காரணிகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com