அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்

தென் மேற்கு பருவ மழை அந்தமான் - நிகோபார் பகுதிகளில் தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்


சென்னை: தென் மேற்கு பருவ மழை அந்தமான் - நிகோபார் பகுதிகளில் தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், கத்திரி வெயிலில் வாடி வரும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்தார். அப்போது, அந்தமான் - நிகோபார் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியிருப்பதாகக் கூறினார்.

மேலும், 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவ மழை தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், குமரி, மாலத்தீவு பகுதிகளில்  துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

தென்மேற்கு பருவ மழை தொடங்குவதையொட்டி குமரி, கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். அதே சமயம், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

எனவே மீனவர்கள் கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பகுதிகளில் மே 30ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அதிகபட்சமாக திருவையாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com