நீண்ட சுரங்க வழிப்பாதை கொண்ட சென்னை மெட்ரோ ரயில்: முதல்வர் பெருமிதம்

இந்தியாவிலேயே மிக நீண்ட தூர சுரங்க வழிப்பாதை கொண்டது சென்னை மெட்ரோ ரயில்தான் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நீண்ட சுரங்க வழிப்பாதை கொண்ட சென்னை மெட்ரோ ரயில்: முதல்வர் பெருமிதம்


சென்னை: இந்தியாவிலேயே மிக நீண்ட தூர சுரங்க வழிப்பாதை கொண்டது சென்னை மெட்ரோ ரயில்தான் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் பழனிசாமி, 2020 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும் என்றும் கூறினார்.

சென்னைவாசிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் நீல வழித்தடத்தில் சின்னமலை - ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் பயணிகள் சேவைகள் துவக்கி வைக்கப்பட்டது.

பச்சை வழித்தடத்தில் எழும்பூர் மெட்ரோ மற்றும் சென்னை சென்டிரல் மெட்ரோ, நீல வழித்தடத்தில் சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏஜி - டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, 2016ல்  கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் முழுவதும் நிறைவடையும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வசதிக்காக சிற்றுந்துகள் இயக்க வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 1.64 கோடி பேர் பயணித்துள்ளனர்.

போக்குவரத்துத் துறையின் அதிநவீன வளர்ச்சிதான் மெட்ரோ ரயில் சேவை. இந்தியாவிலேயே அதிக தூரம் சுரங்கப் பாதையில் மெட்ரோரயில் இங்குவது சென்னையில்தான். சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காற்று மாசுவைக் குறைக்கவும் மெட்ரோ ரயில் சேவை உதவும் என்றும் முதல்வர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com