கோவையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 840 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 840 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 840 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ராஜா தெருவில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சோதனையில் 5.45 மணயளவில் பெங்களூருவில் இருந்து 2 மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 840 கிலோ எடை கொண்ட இந்த குட்கா பொருட்களின் மதிப்பு ரூ. 6.44 லட்சம் ஆகும். இதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறையின் கோவைப் பிரிவு அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில்,

எனக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 2 மனி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 6.44 லட்சம் மதிப்புடைய 840 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மனி லாரியில் 20 பண்டல்களும் மற்றொன்றில் 8 பண்டல்களும் இருந்தன.

இந்த இரு மினி லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, இந்த பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே தங்களிடம் தெரிவித்ததாகவும், இங்கு இதை பெற்றுக்கொள்பவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். 

இதுவரை இந்த 2 வாகனங்களையும் யாரும் உரிமை கோரி வரவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

முன்னதாக, 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருவில் இருந்து கோவை வந்த ஆம்னி பேருந்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com