தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் நிகோபார் தீவுகள், தென் கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. வரும் 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இதேபோல, குமரிக்கடல், கேரளம், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படும். எனவே அப்பகுதிகளுக்கு மே 30-ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.
சுழற்சி நீடிப்பு: தென் மேற்கு வங்கக்கடலில் தென் தமிழகத்தை ஒட்டி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 80 மி.மீ. மழை பதிவானது. திருச்சுழி, கமுதி, காரைக்குடியில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
வெப்பநிலை பொருத்தவரை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 பாரன்ஹீட் டிகிரி முதல் 104 பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை காணப்பட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
வெப்பநிலை குறைந்தது: மாநிலத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வந்ததால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. ஆனாலும், சில இடங்களில் வெப்பநிலை கடுமையாக இருந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில் 99 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com