சுகாதாரத் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட நடவடிக்கை

பொது சுகாதாரத்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சனிக்கிழமை தெரிவித்தார்.
சுகாதாரத் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட நடவடிக்கை

பொது சுகாதாரத்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சனிக்கிழமை தெரிவித்தார்.
 தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் 31ஆவது நிறுவன நாள், மே தினம் மற்றும் மகளிர் தினம் ஆகிய முப்பெரும் விழா திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
 இவ்விழாவுக்கு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.நிர்மலா தலைமை வகித்தார். இதில், அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: கிராமப்புற குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது தொடங்கி, ஏழை - எளிய மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு பேருதவியாக இருக்கும் கிராம சுகாதார செவிலியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்வதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது.
 ஆனால், கிராமப்புற பெண்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று சுக பிரசவம் ஏற்படுவதற்கு துணை நிற்பவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள். இதுபோன்ற செயல்பாடுகளினால் தான், சுகாதாரத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பினை பெற்றுள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மேலும் சிறப்பான பங்களிப்பினை அளிக்க வேண்டும்.
 பொது சுகாதாரத் துறையினை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியினை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உரிய தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். விழாவில், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் பா.நிர்மலா பேசியதாவது:
 அதிமுக அரசு பெண்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி செவிலியர்களின் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, பொது சுகாதாரத் துறையினை தனியார் மயமாக்கும் முயற்சியினை மத்திய அரசு கைவிட, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com