சென்னையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை சபாநாயகர் தனபால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறந்து வைத்தார்.
சென்னையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி திறப்பு

சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை இன்று சபாநாயகர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றனர். 

76,821 சதுர அடி, 10 தளங்கள் மற்றும் தலா 593 சதுர அடி பரப்பில் 68 அறைகள் கொண்ட இந்த விடுதியானது 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் 250 பேர் வரை அமர்ந்து மாநாட்டுக் கூடம் நடைபெறும் வகையிலும் மேல் தளத்தில் இடம் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த விடுதியில் நாள் ஒன்றுக்கு தலா 300 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த விடுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகபட்சம் 5 நாட்கள் வரை அங்கு தங்கலாம். 

இந்த விடுதியில் தங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதிவுகளை சட்டப்பேரவை செயலக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த கட்டிடத்துக்கு 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com