சிபிஎஸ்இ 1, 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது - உயர்நீதிமன்றம்

சிபிஎஸ்ஐ பாடத்திட்டத்தில் 1,2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 1, 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது - உயர்நீதிமன்றம்

1,2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற விதியை தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "1,2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதியை சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்ற வேண்டும். மேலும், 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்களுடன் கணிதத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும். 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக பாடத்திட்டங்களை அமைக்கும் போது என்சிஇஆர்டி விதிகளை பின்பற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டது. 

வழக்கு பின்னணி

சிபிஎஸ்ஐ பாடத்திட்டத்தின் படி 1,2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தில் விதி இருக்கிறது. 

ஆனால், அந்த விதியை தனியார் சிபிஎஸ்ஐ பள்ளிகள் பின்பற்றுவதில்லை. தனியார் பள்ளிகள் மேலும் 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்களுடன் கணிதத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும் அதுவும் விதி, அதனையும் யாரும் பின்பற்றாமல் ஹிந்தி போன்ற மொழிகளையும் கற்பித்து அவர்கள் மீது கூடுதல் சுமையை திணிக்கின்றனர் என்று கூறி வழக்குரைஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.  

இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சிபிஎஸ்இ வாரியம் எச்சரிக்கையோடு நிறுத்தாமல் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் விதிகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று கூறி மத்திய அரசு, சிபிஎஸ்இ, என்சிஆர்டி மற்றும் தமிழ்நாடு தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். 

பின்னர், இந்த வழக்கில் என்சிஆர்டி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் பாடத்திட்டத்தை வகுத்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com