60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன தஞ்சை கோயில் சிலைகள் மீட்பு

60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன ராஜராஜ சோழன், லோகம்மாள் தேவி சிலைகள் இன்று (புதன்கிழமை) குஜராத்தில் மீட்கப்பட்டது.
60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன தஞ்சை கோயில் சிலைகள் மீட்பு

1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற கோயில் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் முக்கியமான சிலையாக கருதப்படும் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகம்மாள் தேவி சிலைகள் திருடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் புகார் அளித்தார். 

இந்த, ராஜராஜ சோழன் (75 செ.மீ உயரம்), லோகம்மாள் (55 செ.மீ உயரம்) சிலைகளின் மதிப்பு 160 கோடி ரூபாய் மதிப்பு என்று கூறப்பட்டது. இதையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கோயிலில் ரகசியமாக விசாரணை நடத்தினார். அதில், சிலைகள் திருடுபோனது உறுதியானது. 

இதைத்தொடர்ந்து, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த சிலைகள் குஜராத்தில் இன்று மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com