சிங்கப்பூர் தேசியப் பல்கலை.யுடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் கல்வி, ஆராய்ச்சிகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
கல்வி -ஆராய்ச்சி ஒப்பந்தத்துடன் அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன், பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் உள்ளிட்டோர்.
கல்வி -ஆராய்ச்சி ஒப்பந்தத்துடன் அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன், பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் உள்ளிட்டோர்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் கல்வி, ஆராய்ச்சிகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன், பதிவாளர் கே.ஆறுமுகம், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் எம்.சீனிவாசன், பேராசிரியர்கள் பி.சம்பத்குமார், எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், துணைவேந்தர் வி.முருகேசன் கூறியதாவது:
இந்தக் கல்வி-ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கானது. பின்னர், மீண்டும் புதுப்பிக்கப்படும். குறிப்பாக, கடல் உயிரின உயராய்வு மையமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் ஏற்கெனவே கூட்டாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. 
இந்த ஆய்வில் ஆழ்கடலில் வாழும் சிலந்தி வகையைச் சார்ந்த மூன்று வகையான நண்டுகளை உலகிலேயே முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். இது அறிவியல் உலகில் அரிய கண்டுபிடிப்பாகும். 
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடக்கமாக பல்கலை. பேராசிரியர் எஸ்.ரவிச்சந்திரன் அண்மையில் சிங்கப்பூர் பல்கலை. வரலாற்று அருங்காட்சியத்துக்குச் சென்று, விஞ்ஞானி பீட்டருடன் இணைந்து கடல் நண்டுகளின் வகைப்பாட்டியல்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com