வண்டலூர் பூங்காவுக்கு புதிய வரவு வெளிநாட்டுக் குரங்குகள்: இன்று முதல் பார்வையிடலாம்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக ஒரு ஜோடி கப்புசீன் குரங்குகள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுக் குரங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் குரங்குகளை சனிக்கிழமை
வண்டலூர் பூங்காவுக்குப் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள (இடமிருந்து)  சிவப்பு கை டாமரின் குரங்கு, அணில் வால் குரங்கு.
வண்டலூர் பூங்காவுக்குப் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள (இடமிருந்து)  சிவப்பு கை டாமரின் குரங்கு, அணில் வால் குரங்கு.


வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக ஒரு ஜோடி கப்புசீன் குரங்குகள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுக் குரங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் குரங்குகளை சனிக்கிழமை (நவ. 3) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், ஊர்வன, பறவைகள் என 2,000-த்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தப் பூங்காவில் உள்ள மனிதக் குரங்கு, பபூன் குரங்கு போன்ற வெளிநாட்டு குரங்குகளும், உள்நாட்டுக் குரங்குகளும் பார்வையாளர்களை அதிகம் கவருகின்றன. இந்நிலையில், புதிய வரவாக வெளிநாட்டுக் குரங்கு இனங்களான ஒரு ஜோடி கப்புசீன் குரங்கு உள்ளிட்ட 4 வெளிநாட்டுக் குரங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், கர்நாடக மாநிலம், மைசூரு உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கு பரிமாற்ற முறை மூலம் கப்புசீன் குரங்குகள் பெறப்பட்டுள்ளன. அணில் வால் குரங்கு, சிவப்பு கை டாமரின் குரங்கு ஆகியவை சென்னையில் தனியாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குரங்குகள் அனைத்தும் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உள்ள நோய்த் தடுப்புப் பிரிவில் வைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. இதில் இவற்றுக்கு நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே சனிக்கிழமை முதல் (நவ. 3) இக்குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com