சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம்: பாஜக தலைவருடன் நாடார் சங்கத்தினர் சந்திப்பு

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நாடார் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நாடார் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
 இச்சந்திப்பு குறித்து தமிழிசை வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் பிரிவில் நாடார் சமுதாயத்தைப் பற்றிய பாடங்கள் குறித்து அதிருப்தி ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் திருத்தங்கள் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசு எந்தத் திருத்தங்களும் செய்யவில்லை.
 இந்நிலையில், பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாடார் சமுதாய நிர்வாகிகளை தில்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இதனால், சிபிஎஸ்இ. பாடத் திட்டத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டன. இப்போது மீதமுள்ள சில பகுதிகளையும் நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து நாடார் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை என்னைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்தப் பிரச்னை குறித்து சங்கத் தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com