நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

அரசியல் பொறுப்பு பற்றி பேசும் "சர்கார்' திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

அரசியல் பொறுப்பு பற்றி பேசும் "சர்கார்' திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 நடிகர் விஜய் நடித்த "சர்கார்' படத்தின் பல இடங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். படத்தின் தொடக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சி தேவையில்லை. அவற்றையெல்லாம் விட அபத்தமாக, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப்பிடிக்கிறார்.
 "சர்கார்' திரைப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அந்த சுவரொட்டியே விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியாகத்தான் அமைந்திருந்தது.
 விளம்பரத்தில் நீக்கம்: அதைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி, நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி அடங்கிய சுவரொட்டி விளம்பரம் நீக்கப்பட்டது. ஆனால், விளம்பரங்களில் நீக்கிய இக்காட்சியை திரைப்படத்தில் பல இடங்களில் "சர்கார்' திரைப்பட குழு திணித்துள்ளது.
 ஒருவரின் வாக்கை இன்னொருவர் பதிவு செய்ததை எதிர்த்து போராடும் அளவுக்கு அரசியல் பொறுப்பு உள்ள "சர்கார்' நாயகனுக்கு, இளைய தலைமுறையை கெடுக்கும் வகையில் புகைப்பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்பு இருக்க வேண்டாமா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com