இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தினகரன் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தினகரன் கண்டனம்


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் சிறீசேனாவின் நடவடிக்கை ஜனநாயக படுகொலை. உலகெங்கும் வாழும் தமிழா்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர நாள்களின் சுவடுகள் மறைந்து தமிழர்கள் அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகா்ந்துவிட்டது. இனவெறி கொண்ட ராஜபட்சவுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சிப்பது ஈழத் தமிழா்களுக்கும், தமிழக மீனவா்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும்.

ஐ.நா மன்றமும், இந்திய அரசும் இலங்கை நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com