தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை: கமல் பேச்சு

நாட்டிற்கு தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்றார் மக்கள்
தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை: கமல் பேச்சு


கிருஷ்ணகிரி: நாட்டிற்கு தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற "மக்களுடனான பயணம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களிடையே கமல் பேசுகையில், 5 ஆண்டுகளுக்கு ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ என ரூபாயை கொடுத்துவிட்டு வெற்றி பெறலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. உங்கள் விலை அதுவல்ல. விற்கவே கூடாது என்பதை, மிகவும் மலிவாக விற்றுவிட்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்களின் மன்றாடல்.

வாக்குக்கு ஐந்தாயிரம் வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளைக்கு தேநீர் கூட குடிக்க முடியாது என்றும் பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள், வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியது தான். வாக்குதான் மக்களின் பலமான ஆயுதம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட மக்கள் வெற்றி பெற வேண்டும்.

மேலும், கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதிக அளவிலான ஆற்றல் உள்ளது. கிராம சபையின் பயனை மக்கள் உணர்ந்தால் அதை பயன்படுத்தியே தீருவீர்கள். தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. 

தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை, மொத்தமாக செய்ய வேண்டியது தான் என்றார் கமல்ஹாசன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com