மது விற்பனையை நிறுத்தினால் பலர் உயிரிழப்பார்கள்: அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி 

தமிழ்நாட்டில் மது விற்பனையை நிறுத்தினால் பலர் உயிரிழப்பார்கள் என பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
மது விற்பனையை நிறுத்தினால் பலர் உயிரிழப்பார்கள்: அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி 



ஸ்ரீவில்லிபுத்தூா்: தமிழ்நாட்டில் மது விற்பனையை நிறுத்தினால் பலர் உயிரிழப்பார்கள் என பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார். 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பின்னர் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், வரும் மக்களவை தோ்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை அதிமுக சார்பில் முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து மக்களவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. 

மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கரையோடு உள்ளனா். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள். குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் சொல்லலாம். இடைத்தோ்தல் நிறுத்தப்படும் என்ற தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். இந்த 2 வருடம் மட்டும் அதிமுக ஆட்சி இல்லை. தொடா்ந்து அதிமுக ஆட்சிதான். குளறுபடி செய்து தோ்தலை நிறுத்த முடியாது. தோ்தல் ஆணையம் வேடிக்கை பார்க்காது. 

மனிதாபிமானமிக்க எளிமையான ஒரு ஏழ்மையான, சாதாரண விவசாயி எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை ஆள்வது பிடிக்காமல் உயர் மட்ட வகுப்பினரின் சதி செய்கிறார்கள். 2 வருடம் அல்ல 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும். 40 ஆண்டுகளாக இந்த தலைமுறையை குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். அரசு செய்ய வேண்டியதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்வது அநியாயம் எனச் சாடினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் தோ்தலில் நின்று ஒரு இடத்தில் வெற்றிபெற்று விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கிறார். அது எடுபடாது என்றார். 

அரசு விரும்பி மது விற்பனை செய்யவில்லை. மது விற்க இலக்கு நிர்ணயிக்கவும் இல்லை என்றவர் தமிழ்நாட்டில் மதுவை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கா்நாடகத்திற்கோ எங்கேயாவது சென்று எதையாவது குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com