அறநிலையத் துறை அலுவலர்களுக்கு புராதன சின்னங்கள் குறித்த பாதுகாப்பு பயிற்சி

அறநிலையத் துறை அலுவலர்களுக்கு புராதன சின்னங்கள் குறித்த பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி திங்கள்கிழமை (நவ.12) தொடங்கப்பட உள்ளது.

அறநிலையத் துறை அலுவலர்களுக்கு புராதன சின்னங்கள் குறித்த பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி திங்கள்கிழமை (நவ.12) தொடங்கப்பட உள்ளது.
 திருக்கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு குறித்த விஷயம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில், சிலை பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் இந்து சமய அறநிலையங்கள் துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புராதன சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புச் சான்றிதழ் பயிற்சியானது அறநிலையத் துறை பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
 இந்த சான்றிதழ் பயிற்சியானது இந்து சமய அறநிலையத் துறையின் ஏழாவது அணியினருக்கு திங்கள்கிழமை முதல் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன் தொடங்கி வைக்கவுள்ளார்.
 சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் தொல்லியில் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வவர்மா, இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com