ஒசூர் அருகே 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்பு

ஒசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்கப்பட்டது.
ஒசூர் அருகே 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்பு

ஒசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்கப்பட்டது.
 ஒசூர் வனச்சரகத்துக்குள்பட்ட கெலமங்கலம் ஊடேதுர்க்கம் காப்புகாட்டில் முகாமிட்டுள்ள யானைகள் வெள்ளிக்கிழமை இரவு உப்புபள்ளம் வழியாக கடூர், தாண்டரகுண்டா, உப்புபள்ளம் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள விளை பொருள்களை துவம்சம் செய்தன.
 பொதுமக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். அப்போது, 8 வயதான ஆண் யானை உப்புபள்ளத்தில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
 கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. தகவலறிந்து அங்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் தீபக் பில்க், கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஒசூர் வனச்சரகர் சீதாராமன், வனவர் முருகேசன், வன காப்பாளர் முருகன் மற்றும் வனத் துறையினர் பொக்லைன் மூலம் கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டி யானை வெளியேற வழி ஏற்படுத்தினர். இதையடுத்து, கிணற்றிலிருந்து பள்ளம் வழியாக வெளியேறிய அந்த யானை ஊடேதுர்க்கம் நோக்கி ஓடியது.
 தேன்கனிக்கோட்டை பகுதியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 4 யானைகள் கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. மேலும், நிகழாண்டு ராயக்கோட்டை அருகே பாவாடரப்பட்டியில் கிணற்றில் விழுந்த 3 வயதான குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணைத்து விடும்போது சக யானைகள் தாக்கி உயிரிழந்தது.
 கடந்த 2011 இல் பீர்ஜேப்பள்ளியில் தண்ணீரில் இல்லாத 30 அடி ஆழ கிணற்றில் 6 மாத குட்டி யானை விழுந்து உயிரிழந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com