நிலையான ஆட்சியே மக்களின் குறைகளைக் களையும்

மக்களின் குறைகளைக் களைய நிலையான ஆட்சியே தீர்வாகும் என நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார்.
நிலையான ஆட்சியே மக்களின் குறைகளைக் களையும்

மக்களின் குறைகளைக் களைய நிலையான ஆட்சியே தீர்வாகும் என நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார்.
 அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடனான பயணத்தின் போது அவர் பேசியது:
 இந்த பயணத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளிவீச வரவில்லை. உங்களிடம் வாக்குறுதியைக் கேட்டுச் செல்ல வந்திருக்கிறேன். சிலரின் ஏழ்மையைப் பயன்படுத்தி வாக்குகளை விலை பேசுவார்கள். உங்கள் வாக்கு விலைமதிப்பில்லாதது. பணம் வாங்கிக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை குத்தகைக்கு தந்து விடாதீர்கள்.
 உங்கள் வாழ்க்கையின் ஆதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை ஜனநாயகம் தர இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதை நினைவுப்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.
 இந்த அரசு அகலும்; உங்கள் வாழ்கை மாறும் என்ற நம்பிக்கை மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது. எங்களின் நேர்மைதான் இந்த நம்பிக்கையைத் தருகிறது. அந்த நேர்மையை அனைவரும் கடைப்பிடித்தால் நாளை நமதே.
 இளைஞர்கள்தான் என்னை ஆளப்போகிறார்கள். அவர்களை நம்பிதான் நாளை நமதே எனக் கூறுகிறேன். தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி.
 ஏழைகளாக இருந்தாலும் பணத்துக்காக வாக்குகளை விற்க வேண்டாம். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும். தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
 நாடு நலமாக இருக்க வேண்டுமெனில் தூய்மையான அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
 எனவே, வாக்களிக்க பணம் பெறாமல் நேர்மையான முறையில் சிறந்த அரசியல் தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஊழலை மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒழிக்க முடியும். நாம் அனைவரும் சேர்ந்து நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com