பூக்கள் விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ ரூ. 2 ஆயிரம்

முகூர்த்த நாள் மற்றும் கடும் மழைப்பொழிவு காரணமாக தோவாளை மலர் சந்தையில் சனிக்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
பூக்கள் விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ ரூ. 2 ஆயிரம்

முகூர்த்த நாள் மற்றும் கடும் மழைப்பொழிவு காரணமாக தோவாளை மலர் சந்தையில் சனிக்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
 குமரி மாவட்டம், தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
 கேரள மாநிலத்திலிருந்து மொத்த பூ வியாபாரிகள் தோவாளை மலர் சந்தைக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்வர்.
 குமரி மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்துவருவதால், பூக்கள் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து முகூர்த்த நாள்கள் வருவதால், பூக்களின் தேவை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
 இதனால், தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 11) வளர்பிறை முகூர்த்தம் என்பதால், அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன.
 இந்நிலையில், தோவாளை மலர் சந்தைக்கு சனிக்கிழமை காலை வழக்கத்தைவிட அதிக அளவில் மொத்த வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர்.
 வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 1,100-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, சனிக்கிழமை ரூ. 2 ஆயிரமாக உயர்ந்தது. ரூ. 750-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ஆயிரம் ரூபாய்க்கும், ரோஜாப்பூ ரூ. 80-லிருந்து ரூ. 100 ஆகவும், ரூ. 75-க்கு விற்பனையான மஞ்சள் கேந்திப்பூ ரூ. 80-க்கும், ரூ. 60-க்கு விற்கப்பட்ட சிவப்பு கேந்தி ரூ. 70-க்கும் விற்கப்பட்டன.
 விலை உயர்ந்திருந்தாலும், அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்ததால், பூக்களை வாங்குவதில் அவர்களிடையே போட்டி ஏற்பட்டது. இதனால், வழக்கத்தைவிட காலை 10.30 மணிக்கே அனைத்து பூக்களும் விற்றுத்தீர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com