மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை

மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் ஆட்சியில் இருந்தால் போதும் என்று முதல்வர், துணை முதல்வர் செயல்படுகின்றனர் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை

மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் ஆட்சியில் இருந்தால் போதும் என்று முதல்வர், துணை முதல்வர் செயல்படுகின்றனர் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை என அதிமுக அரசைக் கண்டித்து அமமுக சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கதிர்காமு முன்னிலை வகித்தார். போராட்டத்தை முடித்து வைத்து, டி.டி.வி. தினகரன் பேசியதாவது:
 இந்த உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கான எச்சரிக்கை மணியாகும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை தரும் மத்திய அரசை அப்புறப்படுத்தவும் தயாராகி விட்டனர். ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் எதையும் கடந்த ஒன்றரை ஆண்டில் நிறைவேற்றவில்லை. பதவியில் இருந்தால் போதும் என்று முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுகின்றனர்.
 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், தேனி மாவட்டத்தின் இயற்கை அழிந்துவிடும், மக்கள் வாழ முடியாது. கேரளத்தில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிக்கிறது. இதனை தடுக்க எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. ஆண்டிபட்டி தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்றார். இப்போராட்டத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com