குரூப்- 2 தேர்வு: 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
குரூப்- 2 தேர்வு: 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
 தமிழகம் முழுவதும் குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் எனப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,199 பணியிடங்களுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்திருந்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 31,349 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
 சென்னையைப் பொருத்தவரை 247 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மையங்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.
 போலீஸ் பாதுகாப்பு: அனைத்துத் தேர்வு மைங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீவிர சோதனைக்குப் பின்னரே, தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் செல்லிடப்பேசி, கை கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை.
 விடியோ பதிவு: தேர்வு மையங்கள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. இதற்காக மாநிலம் முழுவதும் 2,268 விடியோ கிராபர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பதற்றமானவை எனக் கணிக்கப்பட்ட 11 மையங்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன.
 தேர்வு நடைபெறும் 3 மணி நேரமும் தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 400 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை: இந்தத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் மேர்பட்டவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மேலும், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தையும், ஒரு வாரத்துக்குள்ளாக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எழுத உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com